தோல் வியாதிகளில் ஒன்றாக தேமல் ஒரு தொற்று பாதிப்பாகும்.உடலில் ஒரு இடத்தில் இந்த பாதிப்பு வந்தாலும் மற்ற இடங்களில் எளிதில் பரவிவிடும்.இந்த வெள்ளைத் தேமல் பாதிப்பு விரைவில் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள்.
1)கருஞ்சீரகம்
2)தேங்காய்
3)கார்போக அரிசி
முதலில் சிறிதளவு உலர்ந்த கொப்பரை தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரம் மற்றும் ஒரு தேக்கரண்டி கார்போக அரிசியை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.தேங்காயில் உள்ள எண்ணெயே போதும் விழுது பசையாகிவிடும்.
இதை தேமல் மீது பூசி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் தேமல் சில வாரங்களில் மறைந்துவிடும்.
1)சின்ன வெங்காயம்
தேமல் உள்ள இடத்தில் சின்ன வெங்காயச் சாறு தடவினால் விரைவில் பலன் கிடைக்கும்.ஒரு சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி தேமல் மீது தடவினால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.
1)குப்பைமேனி இலை
2)மஞ்சள் தூள்
சிறிதளவு குப்பைமேனி இலையை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.பிறகு அதில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து தேமல் மீது தடவுங்கள்.இப்படி செய்தால் தேமல் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும்.தேமல் பாதிப்பு சீக்கிரம் குணமாகிவிடும்.