USA: அவரவர் சொந்த நாடுகளில் குற்றம் செய்துவிட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் மக்களை விரட்டுவதற்கு அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன் அவர் அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு வகையான புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில். அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இவ்வுலகில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று தான் அமெரிக்கா. இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் உள்ள டாலர் மதிப்பு தான் ஏனெனில் உலகெங்கும் டாலர் மதிப்பில் தான் வணிகம் பெரிதும் நடைபெறுகிறது. எனவே நாளுக்கு நாள் அமெரிக்காவில் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவது அதிகரித்து வருகிறது.
ஆனால் இதில் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வருகின்றனர். அவரவர் சொந்த நாடுகளில் ஏதாவது ஒரு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு தப்பி வந்து அமெரிக்காவில் நுழைகின்றனர். இதுபோன்ற அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது அமெரிக்கா மக்களுக்கு விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எனவே இது போன்ற சட்ட விரோதமான மக்களை நாடு கடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அமெரிக்காவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பதவி ஏற்கும் நிலையில் ராணுவ படைகளை கொண்டு அங்கு சட்டவிரோதமாக உள்ள மக்கள் கொத்து கொத்தாக நாடு கடத்த முடிவு செய்துள்ளார். இதை இவர் சமூக வலைதளங்களில் குறித்து செய்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது 11 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக குஜராத்தை சேர்ந்த பெரும் பணக்காரர் பலரும் அமெரிக்காவில் குடியேறி உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
கனடா அரசு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுத்து தற்போது ஏன் அதை செய்தோம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது. இது போன்ற சம்பவம் ஏதும் அமெரிக்காவில் நடைபெறக் கூடாது என்பதற்காக. அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார்.