பொது மக்களின் வாழ்வில் முக்கிய தேவையாக அமையக்கூடிய சில சான்றிதழ்கள் உள்ளன. இவை ஏதேனும் ஒரு நேரத்தில் தவறவிடப்பட்டால் அதனை மீண்டும் பெற அரசு பெட்டகம் என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு போன்றவைகள் மட்டுமின்றி 10th மற்றும் 12th சான்றிதழ்கள் தொலைந்து போனால் கூட இந்த அரசு பெட்டகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறு மீண்டும் சான்றிதழ்களை பெறுவது என்பதை இங்கு காண்போம் :-
✓ இந்த மாதிரியான அரசு வழங்கும் சான்றிதழ்களை இ-பெட்டகம் என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம்.
✓ இந்த இணையத்திற்கு சென்று https://epettagam.tn.gov.in தொலைந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.
✓ இணையதளத்தில் சென்று ஆதார் எண் கொடுத்தால் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி வரும். அதை உள்ளிட்டு இணையத்திற்கு செல்லவும்.
✓ அங்கு உங்களுக்கு தேவையான ஆவணங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
குறிப்பு :-
இப்போது இதில் குறிப்பிட்ட சான்றிதழ்கள் மட்டும வழங்கப்படுகிறது. விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது.