ரஷ்யா-உக்ரைன் போர் சமீப காலமாக மிகவும் மோசமான நிலையில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய நாட்டின் முக்கிய கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணையை வைத்து உக்ரைனை தாக்கியது. இதனை தொடர்ந்து பிரிட்டன் மீது ரஷ்யா தாக்குதல் மிரட்டல் விடுத்தது வருவதாக சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 2022 ம் ஆண்டு முதலில் வெடித்தது. மேலும் உக்ரைன் நோட்டோ அமைப்பில் செரப்போவதகவும் தகவல் வெளியானது. இந்த இணைவின் மூலம் தன் நாட்டிற்கு ஆபத்து என உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இந்த இரண்டு ஆண்டுகளில் நடுவில் சற்று அமைதியாக இருந்த நிலையில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
மேலும் புதின் நேரடியாக சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் பயன்படுத்த தேவை இல்லைதான். ஆனால் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்பதை பதிவு செய்யவே இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தனர். இதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தினோம், என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இதனால் எந்த நாடு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினாலும் அது உலக போராக மாறும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.