இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கே எல் ராகுலின் விக்கெட் குறித்து சர்ச்சை வெடிக்க ஆரம்பித்த நிலையில் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கியது ஜெஷ்வால் மற்றும் கே எல் ராகுல் கூட்டணி இதில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த கே எல் ராகுல் திடீரென விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆனார்.
இந்த விக்கெட்டில் பந்து கே எல் ராகுலின் பேட்டில் உரசி சென்று அவுட் ஆனார் என்று ஆஸ்திரேலியா அணி ரிவ்யூ செய்தது. அதில் கே எல் ராகுலின் பேட்டுக்கு நேராக பந்து வரும்போது அதிர்வு ஏற்பட்டது உடனே அவுட் கொடுத்தது. ஆனால் அதே நேரத்தில் அவரின் பேட் காலில் கட்டியிருந்த pad ல் உரசியது. இந்த அவுட் கொடுக்கும் ரிப்ளேவில் ஒரு ஆங்கிலில் மட்டும் காட்டப்பட்டது. வேறு ஆங்கில் கேட்டப்போது காட்டப்படவில்லை. இதனால் கே எல் ராகுல் வெளியேறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையாக x தளத்தில் நம்பர் 1 டிரெண்டிங் ஆக உள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரர் ராபின் உத்தப்பா போட்டியில் தொடங்கும் முன் 100 கேமராக்கள் இருந்தும் கே எல் ராகுலுக்கு மட்டும் 1 கேமரா தான் என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் எதற்காக கள நடுவர்கள் முடிவை மாற்றி சொல்ல வேண்டும் டெக்னாலஜி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.