கேரளா: கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.
நாளுக்கு நாள் உலக அளவில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட, வண்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர். இவர்,பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அந்த பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூற அவர்கள் அந்த பகுதியில் உள்ள வண்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாணவிகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்.
இந்த காலத்தில் ஒரு பெண் தனியாக செல்லவே பயமாக உள்ளது என பெற்றோர்கள் கூறிவருகின்றனர். இது போன்ற பாலியல் தொல்லைகள், கற்பழிப்பு போன்ற கொடூர நிகழ்வுகள் நடக்க முக்கிய காரணமாக அவர்கள் அணியும் உடைகள் என கூறுவார்கள். ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஓன்று. ஒரு சிறு குழந்தை அணியும் உடையில், பாலியல் துன்புறுத்தும் அளவிற்கு அந்த உடை உள்ளதா. ஒருவர் பார்க்கும் பார்வையிலும் அவரது எண்ணத்திலும் தான் ஒரு மனிதன் உயர்ந்தவராக கருதப்படுவர்.