பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய..ஓய்வு பெற்ற ஜி.ஜி!! நீதிமன்றம் அதிரடி!!

Chennai: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார் ஓய்வு பெற்ற ஜி.ஜி முருகன். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழக காவல் துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் 2017-18 ஆம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார். மேலும் இவர் ஜி.ஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அப்போது அந்த சமயத்தில் இவர் அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஆபாச மெசேஜ் அனுப்பி அந்த பெண் எஸ்பியை தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த பெண் காவலர், போலீசில் புகார் அளித்தார்.

ஆனால் அது பற்றி யாரும் நடவடிக்கை எடுக்காததால் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. க்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து முருகன் மீது பாலியல் வன்கொடுமை போன்ற 6-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆனால் அந்த விசாரணை முன்னேற்றம் அடையாமல் இருந்ததால் அவரை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக பெண் காவலர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகதால் அவரை கைது செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் ஒரு பெண் காவல் அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்கள் நாங்கள் யாரிடம் போய் பாதுகாப்பிற்கு நிற்பது என கூறி வருகின்றனர்.