இந்திய வளர்ந்து வரும் வீரரான திலக் வர்மா தொடர்ந்து 3 டி 20 சதங்களை பதிவு செய்து இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-தென்னாபிரிக்க இடையிலான டி20 தொடரில் இரண்டு போட்டியில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் சதம் விளாசியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதில் கடைசி இரண்டு போட்டிகளில் திலக் வர்மா தொடர்ந்து சதம் விளாசினார்.
தற்போது திலக் வர்மா சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடி வருகிறார். அதில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். மேலும் மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் மேகாலயா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதில் திலக் வர்மா 67 பந்துகளில் 151 அடித்து அபார சதத்தை பதிவு செய்தார்.
இதில் 14 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் விளாசினார். இந்த சதத்தின் மூலம் தொடர்ந்து 3 சதங்களை பதிவு செய்து சாதனை படைத்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் முதல் 150 அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் ஸ்ரேயர்ஸ் ஐயர் 147 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.