இன்றைய உலகில் தினமும் புது புது நோய்கள் உருவாகி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.இதனால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.
இந்த பாதிப்புகளை மருந்து மாத்திரை இன்றி ஆடாதோடை இலையை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.
சளியை கரைக்கும் ஆடாதோடை
தேவையான பொருட்கள்:
1)ஆடாதோடை இலை
2)தேன்
செய்முறை விளக்கம்:
இரண்டு ஆடாதோடை இலையை எடுத்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆடாதோடை இலையின் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் சளி தொந்தரவு அகலும்.
இருமலை போக்கும் ஆடாதோடை
தேவையான பொருட்கள்:
1)ஆடாதோடை விலை – இரண்டு
2)எருமைப் பால் – கால் டம்ளர்
செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு ஆடாதோடை இலையை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த சாறை கால் டம்ளர் காய்ச்சிய எருமைப்பாலில் சேர்த்து பருகினால் இருமல்,தொண்டை அடைப்பு,தொண்டைப்புண் உள்ளிட்டவை சரியாகும்.
காய்ச்சலை குணமாக்கும் ஆடாதோடை
தேவையான பொருட்கள்:
1)ஆடாதோடை இலை சாறு – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)கண்டங்கத்திரி வேர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
முதலில் சிறிதளவு கண்டங்கத்திரி வேரை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள்.பிறகு ஆடாதோடை இலையை அரைத்து அதன் சாறை கண்டங்கத்திரி வேர் சாறில் கலந்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் மிக்ஸ் செய்து காலை,மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.