தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பல்வேறு துறைகளில் பயிற்சியுடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளிநாடுகளில் அதிக அளவில் கார் ஓட்டுநர்கள் தேவைப்படுவதால், தமிழக இளைஞர்களுக்கு கார் ஓட்டுநர் பயிற்சியை இலவசமாக வழங்கி அவர்களை வெளிநாடுகளில் பணியமர்த்த திமுக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது வழங்கப்பட உள்ள இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் :-
45-நாள் LMV/HTV மற்றும் 30-நாள் Forklift Operator திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 8வது, 10வது அல்லது 12வது வகுப்புத் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.
ரெட் ஹில்ஸ், மறைமலைநகர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியானது உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற உதவியாக இருக்கும்.
மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியீடு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன்’ திட்டம் 2022 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக ஊதியம் பெறும் வேலைகள், தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவரை, 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், 11 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.