தண்ணீரை உடனடியாக சூடேற்றும் கருவி கீசர்.இது குளிர்காலங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.மழை மற்றும் பனி காலத்தில் நீர் அதிக குளிர்ச்சியாக இருப்பதால் சிலர் குளிக்கவே விரும்பமாட்டார்கள்.
குளிர்காலத்தில் சூடான நீரில் குளிக்கவே பலரும் விரும்புகின்றனர்.இதற்காக பாத்ரூமில் கீசர் வைத்து பயன்படுத்துகின்றனர்.கீசர் இருந்தால் நிமிடத்தில் தண்ணீர் சூடாகிவிடும்.தற்பொழுது பல பிராண்டுகளில் கீசர் கிடைக்கிறது.இதில் மின்சாரத்தில் இயங்கும் கீசர்,கேஸ் கீசர் என்று இருவகை இருக்கிறது.
மின்சாரதத்தில் இயங்கும் கீசரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதிக மின்கட்டணம் வரும்.இதனால் நீண்ட நேரம் கீசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.குளிப்பதற்கு முன்னர் கீசரை ஆப் செய்துவிட வேண்டும்.
தேவையில்லாத நேரத்தில் கீசர் ஓடினால் அதில் அடிக்கடி பழுது ஏற்படும்.எனவே குளிக்கும் பொழுது மட்டும் கீசரை பயன்படுத்தவும்.நீங்கள் நீண்ட நாட்கள் கீசரை பயன்படுத்தாமல் இருந்தால் ஒருமுறை பழுது பார்த்துவிட்டு கீசரை பயன்படுத்தலாம்.அதிக நேரம் கீசர் இயங்கினாலோ பழுதான கீசர் இயங்கினாலோ அவை வெடிக்க வாய்ப்பிருக்கிறது.
கீசரை ஆன் செய்துவிட்டு குளிப்பதை தவிர்க்கவும்.கீசர் ஆனில் இருந்தால் அதில் இருந்து மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.கீசரை பயன்படுத்திய பிறகு அதை கவனமாக ஆப் செய்ய வேண்டும்.கீசரில் பழுது ஏற்பட்டால் நீங்களாகவே பழுது பார்க்கக் கூடாது.எலக்ட்ரீஷியனை வைத்து மட்டுமே கீசரை பழுது பார்க்க வேண்டும்.