எனக்கு முரளி விஜய் செய்ததை நான் ஜெய்ஷ்வாளுக்கு செய்தேன்!!  உருக்கமாக கூறிய கே எல் ராகுல்!!

0
432
KL Rahul said warmly
KL Rahul said warmly
cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் ஜெய்ஸ்வால் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் தொடக்க ஆட்டம் சிறப்பாக விளையாடினார் அதில் ஜெயஷ்வால் அபாரமாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து கே எல் ராகுல் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் எதுவும் இல்லாமல் 172  ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்த இணை ஏராளமான சாதனைகள் செய்தது. மேலும் கே எல் ராகுல் 77 ரன்களில் அவுட் ஆனார்.

ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 161 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேலும் இதுகுறித்து ஜெயஸ்வால் கூறுகையில் கே எல் ராகுல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். எண்ணை அமைதி படுத்தி என்னை வழிநடத்தினார் என்று கூறினார். மேலும் இது பற்றி விளக்கமளித்துள்ளார் கே எல் ராகுல்.

அவர் கூறுகையில் நான் முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதலில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த போது துவக்க வீரராக இருந்த முரளி விஜய் தனக்கு உதவியதாகவும், அவர் எனக்கு செய்ததை நான் ஜெயஷ்வாளுக்கு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

Previous articleவெளுத்து வாங்கும் கனமழை எச்சரிக்கும் வானிலை ஆராய்ச்சி மையம்!!
Next articleராதிகா சரத்குமார் போன்ற நடிகர் நடிகைகளை பார்க்கவே முடியாது.. கையில் ரத்தத்தோடு என்ன பாராட்டுனாங்க! நடிகர் பாபூஸ் பெருமிதம்!