இந்திய ரயில்வே மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பிற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயில்வே கட்டணங்கள் குறைவு. இதன் காரணமாக சாமானிய மக்களும் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது. சிலர் பயணம் செய்வதற்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்து வைத்திருப்பார்கள்.
முக்கியமான பண்டிகைகள் அல்லது வீட்டு விசேஷங்கள் போன்றவற்றிற்கு இந்த முறையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் அப்படி முன் பதிவு செய்யும் டிக்கெட்டுகளில் பயணிக்க முடியாமல் போகலாம். இது போன்ற சமயங்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் பெயர் மாற்றம் செய்வது எப்படி?: முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு வழங்க ஆன்லைனில் பெயரை மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
ஸ்டெப் 1: முதலில் IRCTC இணையதளம் மூலம் உங்கள் விவரங்களை வழங்கி உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு “மை புக்கிங்ஸ்” சென்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 3: நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை தேர்ந்தெடுக்கவும். பிறகு “பேசஞ்சர் நேம் சேஞ்ச்” என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: யாருடைய பெயருக்கு டிக்கெட்டை மாற்ற இருக்கிறீர்களோ? அவருடைய பெயர், வயது மற்றும் பாலினத்தை வழங்க வேண்டும். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் புதிய இ-டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆஃப்லைன் மூலம் டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: அருகில் உள்ள ரயில் நிலையத்தின் கவுண்டருக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: பெயர் மாற்றத்திற்கென பிரத்தியேகமாக படிவங்கள் வழங்கப்பட்டிருக்கும். அவற்றை வாங்கி விவரத்தை நிரப்ப வேண்டும். அதற்கு அசல் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்திருக்க வேண்டும்.
ஸ்டெப் 3: புதிதாக டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்யும் நபரின் அடையாள விவரங்களை வழங்க வேண்டும். இதற்கு தேவையான கட்டணத்தை செலுத்தி புதிய டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த பெயர் மாற்றம் ஒரே ஒரு முறை மட்டும் தான் அனுமதிக்கப்படும். மேலும் ட்ரெயின் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். டிக்கெட்டின் பெயர் மாற்றம் மட்டுமின்றி பயணத் தேதியை மாற்றும் வசதியையும் இந்திய ரயில்வே வழங்குகிறது.
ஆன்லைனில் பயணத் தேதியை மாற்றுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் IRCTC இணையதளம் மூலம் உங்களுடைய விவரங்களை வழங்கி உள்நுழையுங்கள்.
ஸ்டெப் 2: பின்னர் “மை புக்கிங்ஸ்” என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 3: நீங்கள் எந்த டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெப் 4: “சேன்ஜ் ஜர்னி டேட்” என்பதைக் கிளிக் செய்யுங்கள். புதிய தேதியை தேர்ந்தெடுத்து அந்த தேதியில் டிக்கெட் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். சீட்டு இருந்தால் கட்டணத்தைச் செலுத்தி புதிய டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஆஃப்லைனில் டிக்கெட் தேதியை மாற்றுவது எப்படி?: பெயர் மாற்றத்திற்கு எப்படி டிக்கெட் கவுண்டருக்கு சென்று விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டுமோ அதே போல டிக்கெட் கவுண்டருக்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதில் விண்ணப்பதாரரின் பெயர் மற்ற விவரங்கள் அதோடு மாற்ற வேண்டிய தேதி ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பெயர் மற்றும் பயண தேதி மாற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
ரத்து செய்த டிக்கெட்களில் பெயர் மற்றும் பயண தேதியை மாற்ற முடியாது. அதோடு டிரெயின் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பெயர் மாற்றம் அல்லது தேதி மாற்றம் செய்யப்பட வேண்டும். ஏசி, ஸ்லீப்பர் கோச் டிக்கெட்களின் பெயரையும் மாற்ற முடியாது. அதோடு தட்கல் டிக்கெட் பெயரையும் மாற்ற முடியாது.
மேலும் பெயர் மாற்றம் செய்யும்போது உங்களுடைய டிக்கெட் கட்டணம் குறைவாக இருந்தால் மீதித்தொகை வழங்கப்படாது. அதுவே டிக்கெட் விலை நீங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்டை விட அதிகமாக இருந்தால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தி ஆகவேண்டும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாத நேரத்தில் இது போன்ற வசதியை பயன்படுத்தி பலனடையலாம். இதனால் டிக்கெட் கட்டணம் வீணாகாமல் இருக்கும் .