தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! அசத்தலான அப்டேட் வழங்கிய அமைச்சர்!
தமிழ் மொழியின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உயர்த்தும் விதமாக தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்த அரசு தரப்பில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று தமிழ் இலக்கியம் படித்தவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தபடி காத்திருந்தனர். இதுபோன்ற நபர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான சாமிநாதன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் அரசு வேலையில் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் இலக்கியம் மிகவும் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றாகும். தமிழ் இலக்கியத்தின் மூலம் கலாச்சாரம், அரசியல், சமூகம், இலக்கியம், மொழி போன்ற நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சாமிநாதன் தமிழ் இலக்கியம் படித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதோடு தஞ்சாவூரில் இருக்கும் சோழர் அருங்காட்சியகத்தை அலங்கரிக்க படங்கள் தயாராகி வருவதாகவும், அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு மொழிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ் மொழியை பாதுகாக்க அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழ் மொழியை விருப்ப பாடமாக எடுத்து படித்தால் பிற்காலத்தில் சிறப்பாக இருக்கலாம் என்று இன்றைய இளைய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.