நம் நாட்டில் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மருத்துவ சேவை சற்று குறைவாகவே இருக்கிறது. மலைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவசர நிமித்தமாக கூட மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.
அதன்படி ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடமாடும் மருத்துவர் வாகன சேவை தொடங்க உள்ளது. இந்த சேவையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர், செவிலியர், வாகன அலுவலகப் பணியாளர் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்பிபிஎஸ்., எம்டி., பிடிஎம்எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 64,000 வழங்கப்படும். மற்ற பணியிடங்களுக்கும் அதற்கான தக்க ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய “[email protected]” என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு “9442675508” என்ற மொபைல் எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 27, 2024 ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது.