நம் உடல் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.இதனால் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் கால்சியம் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நம் உடலில் இரண்டு சதவீதம் கால்சியம் மட்டுமே உள்ளது.அப்படி இருக்கையில் உணவின் மூலம் கால்சியம் சத்தை பெற வேண்டியது முக்கியமாகும்.உலர்ந்த பழங்கள்,விதைகள்,பால் மற்றும் பால் பொருட்கள்,மீன்,சிறு தானியங்கள்,கீரைகள் உள்ளிட்டவற்றில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.
கால்சியம் சத்தை அதிகரிக்கும் பானங்கள்:
1)ராகி மில்க்
இரண்டு தேக்கரண்டி ராகியை ஒரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடவும்.
பிறகு ஒரு மிக்சர் ஜாரில் ஊறவைத்த ராகி சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு ராகி பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அரைத்த ராகி பாலை அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.
2)ஆரஞ்சு பழச்சாறு
ஒரு முழு ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஜூஸாக குடித்து வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.இதில் கால்சியம்,வைட்டமின்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
3)சோயா பால்
அதில் கால்சியம் மற்றும் புரதம் அதிகளவு உள்ளது.சோயாவை தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை கொதிக்க வைத்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.