திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ( 26.11.2024 ) கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரெட் அலங்காரமாக டெல்டா பகுதிகளில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றே விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் விடுத்துள்ள அறிவிப்பின்படி :-
இன்று நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடந்து வரும் நிலையில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதன் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.