தமிழ்நாட்டின் பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு முந்தைய வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் வழங்கப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாகும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேட்டி சேலைகள் வேகமாக தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இது தொடர்பாக அமைச்சர் காந்தி அவர்கள் கூறுகையில் :-
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை 2025 ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி ரேஷன் கடைகளில் இலவச வேட்டி சேலையோடு பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்படும். விலையில்லா வேட்டி சேலை திட்டத்தினைப் பொறுத்தவரை உற்பத்திக்கு தேவையான தரமான நூல்கள் மூலமாக பொங்கல் 2025-க்கு தேவையான வேட்டி சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவை தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவை பல்வேறு தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொள்முதல் செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் நாளன்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நெசவாளர்களுக்கான வாழ்வாதாரம் உயரும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய இலவச வேட்டி சேலை கிடைக்கும் என அமைச்சர் காந்தி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.