ஒரே நாடு.. ஒரே சப்ஸ்கிரிப்ஷன்!! ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான புதிய திட்டம்!!

0
81
One Country.. One Subscription!! New Program for Research Students!!
One Country.. One Subscription!! New Program for Research Students!!

மத்திய அரசு புதிதாக ஒரே நாடு ஒரே சப்ஸ்கிரிப்ஷன் என்ற திட்டத்தினை ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான ஆய்விதழ்கள், கட்டுரைகளை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எளிதில் படித்து பயன்பெறுவதற்காக செயல்படுத்த உள்ளது.

ரூ.6,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று (நவ. 25) ஒப்புதல் வழங்கியது.

மேலும் இதில், ‘ ஒரே நாடு, ஒரே சப்ஸ்கிரிப்சன்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், நாடெங்கிலும் ஆராய்ச்சிப் படிப்புகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், கல்வி இதழ்கள், புத்தகங்களை இணைய வழியில்(டிஜிட்டல்) படித்து பயன் பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டுரைகளை இணைய வழியில் எளிதாக வழி வகை செய்யப்பட்டும் உள்ளத்துடன், இத்திட்டத்துக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம், 6,300 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1.80 கோடி மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொறுப்பை, மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவால்(யுஜிசி) பல்கலைக் கழகங்களுக்கு இடையே நூலகங்களை நிர்வகிக்க உருவாக்கப்பட்டுள்ள ‘தகவல் மற்றும் நூலக வலையம்(இன்ஃப்ளிப்நெட்)’ ஒருங்கிணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் இத்திட்டத்தால் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமூத்த குடி மக்களுக்காக தொடங்கப்பட்ட இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்!! மத்திய அரசு அறிவிப்பு!!
Next articleஎலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் இலவசம்!!