ஜனவரி 14-ஆம் தேதி நடக்கவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகத்தின் பாரம்பரியமான பண்டிகையான பொங்கல் அன்று மத்திய அரசு அறிவித்திருந்த சி ஏ தேர்வானது நடைபெற இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் கொடுத்த எதிர்ப்பின் பேரில் தற்பொழுது தேர்வின் தேதியானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன் தெரிவித்த கண்டனம் பின்வருமாறு :-

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அன்று அரசு விடுமுறை தினம் இருக்கும் நிலையில், திட்டமிட்டு பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதாக இவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சாரதி தெரிவித்த பதில் பின்வருமாறு :-

இதிலும் மொழி பிரச்னையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருகின்றனர் என்றும் தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் கண்டனங்கள் அதிகரித்து வந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடக்க இருந்த சிஏ தேர்வானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.