இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம். இதனை தொடர்ந்து ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் தொடங்கிய பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டுதான் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
மேலும் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பின் சென்று அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், அது மட்டுமல்லாமல் பல மக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.
அதன் பின் காசா பகுதியில் பெரும் தாக்குதல்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நெதன்யாகு காச சென்று ஹமாஸ் எந்த நிர்வாகம் செய்ய முடியாது, ஹமாசின் கதை முடிந்தது என்று கூறியிருந்தார். இந்த வகையான தாக்குதல்களில் பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகு விற்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.