விந்தணுக்களின் எண்ணிக்கை மளமளவென உயர்த்தும் மருதாணி!! இதனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்!!

0
186
Henna increases the number of sperms. Add only this one item to this!!
Henna increases the number of sperms. Add only this one item to this!!

கை மற்றும் கால் விரல்களை சிவக்க வைக்கும் மருதாணி ஒரு மூலிகையாகும்.இவை விந்தணு குறைபாடு,கால் ஆணி,உடல் சூடு,காயம்,கை மற்றும் கால் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.இந்த மருதாணியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது’குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருதாணி

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை சாறு
2)சர்க்கரை
3)தண்ணீர்

பயன்படுத்தும் முறை:

சிறிதளவு மருதாணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

காயத்தை குணமாக்கும் மருதாணி

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை
2)மஞ்சள் தூள்

பயன்படுத்தும் முறை:

கால் கைப்பிடி மருதாணி இலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காயம் பட்ட இடத்தில் தடவினால் கிருமிகள் அழிந்து காயங்கள் சீக்கிரம் குணமாகும்.

கை கால் எரிச்சலை சரி செய்யும் மருதாணி

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை
2)எலுமிச்சை சாறு

பயன்படுத்தும் முறை:

சிறிதளவு மருதாணி இலையை விழுது பதத்திற்கு அரைத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கை கால்களில் பூசி வந்தால் எரிச்சல் குணமாகும்.

கால் ஆணியை குணமாக்கும் மருதாணி

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை
2)வசம்பு
3)மஞ்சள் தூள்
4)கற்பூரம்

பயன்படுத்தும் முறை:

கால் கப் மருதாணி இலையுடன் ஒரு துண்டு வசம்பு,ஒரு கற்பூரம் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கால் ஆணி மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.

உடல் சூட்டை தணிக்கும் மருதாணி

தேவைப்படும் பொருட்கள்:

1)மருதாணி இலை
2)தண்ணீர்

பயன்படுத்தும் முறை:

சிறிதளவு மருதாணியை தண்ணீர் விட்டு விழுது பதத்திற்கு அரைத்து கை மற்றும் கால் விரல்களில் பூசி வந்தால் உடல் சூடு தணியும்.

Previous articleஉடலில் தொங்கும் சதைகளை குறைக்க இதை மட்டும் ரெகுலரா செய்யுங்கள் போதும்!!
Next articleமுடியை கருமையாக்குவதுதோடு.. பொடுகை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் டை இது!!