மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!! இன்றும் விலை அதிகரிப்பு!!

0
56
gold-price-on-the-rise-again-price-increase-today
gold-price-on-the-rise-again-price-increase-today

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் இரண்டு நாட்களாக விலை ஏற்றம் கண்டுள்ளது.

இந்திய மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால் அதன் விலை இங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சுபகாரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை.

ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 59 ஆயிரத்தை கடந்து உச்சத்தை பெற்றது.

இதனால் தங்கம் வாங்கும் ஏழை எளிய மக்களின் கனவில் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதனை தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்காத நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூபாய் 56,840க்கும், அதேபோல் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூபாய்.98 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

 

Previous articleபுயல் எச்சரிக்கை!! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!!
Next article9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை!! தந்தையான 15 வயது சிறுவன் அதிர்ச்சி சம்பவம்!!