இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் மோதிய முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்நிலையில் அடுத்த போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் கேப்டன் பும்ப்ரா சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு அணியை அபார வெற்றி பெற செய்தார்.
இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைந்தார். அதனால் இனி வரும் 4 போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார், பும்ப்ரா துணை கேப்டனாக விளையாடுவார். இந்நிலையில் இந்திய அணி ரசிகர்கள் பும்ப்ரா சிறப்பாக செயல்பட்டார்,அவர் தொடர் முழுவதும் கேப்டனாக செயல் பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி இதற்கு முன் சொந்த மண்ணில் நியூசிலாந்து உடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.