கோவை மாவட்டம் உக்கடம் பெரிய குளத்தில் வாட்டர் ஏ.டி. எம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேலும் இந்த வாட்டர் ஏ.டி.எம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் தூய்மையான குடிநீரை வழங்கக்கூடியது.
மேலும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒன்பது குளங்கள் ரூபாய் 377.54 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் உக்கடம் பெரிய குளம் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து முதலமைச்சர் இன்று அதை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் .இதில் ஐ லவ் கோவை என்ற செல்ஃபி கார்னர் இடம் பெற்றிருப்பது குடிப்பிடத்தக்கது.
மேலும் பெரிய குளம் கரைப்பகுதியில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்மையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இந்த வாட்டர் ஏ.டி.எம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.