பிரிட்டன் நாட்டில் பிறந்த குழந்தையை மூன்று வருடங்களாக கட்டிலின் அடிப்பாகத்தில் உள்ள டிராவில் அடைத்து வைத்த கொடிய தாய்.
2020 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை 2023 ஆம் ஆண்டு இறுதி வரை வீட்டில் உள்ள தன் கணவருக்கு கூட தெரியாமல் கட்டலின் அடியில் உள்ள டிராவில் மறைத்து வைத்த தாய்.
இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு சமூக சேவகர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். முடி, உடலில் குறைபாடுகள் மற்றும் தோலில் தடிப்புகளுடன் குழந்தை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
“குழந்தையை நீங்கள் வைத்திருக்கும் இடம் இதுதானா? ” என சமூக சேவகர் அவரது தாயிடம் கேட்டதற்கு, “ஆமாம், டிராயரில் வைத்திருக்கிறேன்” என்று தாய் பதிலளித்திருக்கிறார்.அவரது தாய் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் என்றும் அந்த சமூக சேவகர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது அந்த குழந்தைக்கு முறையான பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக அவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவர் மூன்று வயது குழந்தையைப் போல் இல்லாமல், ஏழு மாத குழந்தை போல் தோற்றமளித்ததாகவும், தற்போது அவருக்கு உணவு வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து எனது தாயிடம் கேட்கப்பட்ட பொழுது, தான் நன்றாக வளர்த்த குழந்தைகள் தற்பொழுது தன்னுடன் இல்லை என்ற கோபத்தால் தான் இவ்வாறு செய்ததாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். இதற்கு பதில் அளிக்க நீதிபதி அவர்கள், உங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக இவ்வாறு நீங்கள் பேச வேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், தன்னுடைய இத்தனை கால அனுபவத்தில் இவ்வாறு ஒரு பிரச்சனையை சந்திப்பதில்ல என்றும் அவர் தெரிவிக்கிறார்.