திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 25 க்குகான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 4,842 பயணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த 4842 பேரில் தற்பொழுது 847 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படாமல் அவர்களை அடுத்த ஆண்டு பயனர்களாக சேர்க்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில், 2030க்குள் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்புகளில் பதிவு செய்தோர் பயனாளிகளாக கருதப்படுவர்.
இந்த கணக்கெடுப்பு திட்டங்களின் கீழ் ஊராட்சியின் இலக்கிற்கேற்ப தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி அளவிலான குழு இறுதி செய்யும்.குழு உறுப்பினர்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோர் உள்ளனர்.இந்த குழு ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இறுதியில் தேர்வு செய்யப்பட்ட பயனாளி விபரத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்படும். பின், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணி உத்தரவு வழங்கப்பட்டு, வீடு கட்டும் பணி துவங்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த பயனர்களுக்கு 360 சதுரடியில் 300 சதுரடி கான்கிரீட் தளத்துடனும், 60 சதுரடி பயனாளியின் விருப்பப்படி சாய்தள கூரை அமைத்துக் கொள்ளலாம். வீடு ஒன்றுக்கு 3.10 லட்சம் ரூபாய் மானிய தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 25 க்குகான 4,842 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணி துவங்கியது.இதில், பல்வேறு காரணங்களால், 847 பேர், அடுத்தாண்டு பயனாளராக சேர்க்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசுக்கு நிதி தட்டுப்பாடு இருப்பதால், தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான கலைஞர் கனவு இல்ல வீடுகளை கட்டாமல், அடுத்த நிதியாண்டுக்கு மாற்றியுள்ளது.இதனால், ஆயிரக்கணக்கான பயனாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.