சமீபத்தில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த ஐ பி எல் 2025 க்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் சில அணிகள் சிறந்த அணி வரிசையை தேர்வு செய்தது சில அணிகள் சுமாரான அணி வரிசையை தேர்வு செய்தது.
இந்த சிறப்பான அணியை தேர்வு செய்த வரிசையில் டெல்லி அணியும் உண்டு இந்த ஐ பி எல் இல் முக்கியமான வீரர்களை குறைந்த விலைக்கே வாங்கி அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. மேலும் இந்த அணியில் முக்கிய வீரரான கே எல் ராகுலை ரூ.14 கோடிக்கே வாங்கியது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.
இதுபோன்ற சிறந்த வீரர்களை வாங்கிய அணி என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. மேலும் இந்த அணியில் இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக் ரூ.6.25 கோடிக்கு வாங்கியது. தற்போது ஹாரி ப்ரூக் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஹாரி புரூக் தனது 7 வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதனால் டெல்லி நிர்வாகம் கொண்டாட்டத்தில் உள்ளனர், மேலும் இவர் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்களை விளாசியுள்ளார். இந்த முறை ஐ பி எல் போட்டியில் இவர் களமிறக்கப்படுவாரா? அப்படி விளையாடினால் எந்த வரிசையில் களமிறக்கப்படுவார் என டெல்லி அணி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.