சென்னை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த பற்றி வெளிவராத தகவலை கூறியுள்ளார் நடிகர் ஆர் ஜே பாலாஜி.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் சீக்கா எனப்படும் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1983 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்களை அடித்துள்ளார்.
மேலும் இவரை பற்றி வர்ணனையாளர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை அவரை பற்றி தெரியாத தகவல்களை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியது, பொதுவா சீக்கா என்றால் அனைவரையும் ஒருமையில் பேசுபவர் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் அவர் வீட்டிற்கு போனால் அவர் முற்றிலும் வேறு. ஒரு நாள் அவர் எண்ணை வீட்டிற்கு அழைத்தார். அப்போது நான் அங்கு சென்ற போது அந்த வீட்டில் 20 நபர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
நான் அவர்களிடம் சென்று உங்களுக்கு என்ன பணி என்று கேட்டேன் அதற்கு அவர்கள் எங்கள் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் ஸ்ரீகாந்த் சார் தான்.
எங்களிடம் அவர் கூறியது வீட்டிற்கு தினக்கூலிக்கு செல்வது நீங்கள் தான் கடைசி உங்கள் குழந்தைகளை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினர். இதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரை கூறியுள்ளார்.