ஐடெலின் புதிய அறிமுக.. இனி ரூ 999 கே மொபைல்??

0
93
Idel's new launch.. Now Rs 999k mobile??
Idel's new launch.. Now Rs 999k mobile??

மொபைல் டிசைனில் பாரம்பரிய சதுர வடிவத்தைக் கவிழ்த்து, மொபைல் உலகை அதிரவைத்துள்ளது ஐடெல்! முற்றிலும் புதுமையான வட்ட டிஸ்பிளே கொண்ட மொபைல் சாதனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு பெயர் “ஐடெல் சர்க்கிள் 1”, உலகிலேயே முதல்முறையாக வட்ட டிஸ்பிளே கொண்ட மொபைல் சாதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண போன் அல்ல! ப்ராடக்ட் டிசைனில் சீரியசாக வித்தியாசத்தை தேடுபவர்கள் கண்டிப்பாக இதை மிஸ் பண்ணக்கூடாது.

ஐடெல் சர்க்கிள் 1: விலை கேட்டு உங்களால் நம்பவே முடியாது!

இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.1899 என்றாலும், தற்போது Amazon தளத்தில் சிறப்பு சலுகையில் வெறும் ரூ.999க்கு கிடைக்கிறது! அதுவும் கீசெயின் போல பயன்படுத்தக் கூடிய சிறிய வடிவத்தில், எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கும் மொபைலாக இது உங்களை கவரும்.

ஐடெல் சர்க்கிள் 1 மொபைல்: உங்களை கவரும் அம்சங்கள்
வட்ட டிஸ்பிளே: 1.32 இன்ச் கிரிஸ்டல் கிளியர் வட்டமான திரை
கீபேட் வசதி: பாவனையில் எளிதான அடிப்படை கீபேட்

சிறியதாக இருந்தாலும் சக்தி மிக்கது:
4MB RAM
32GB மெமரி
500mAh பேட்டரி: இரு நாள் பேட்டரி ஆயுள்

செயல்பாடுகள்:
டூயல் சிம் வசதி
FM ரேடியோ, கேமரா, மற்றும் மியூசிக் பிளேயர்
ப்ளூடூத், வைஃபை மற்றும் USB இணைப்பு

ஐடெல் சர்க்கிள் 1: புதிய அளவுகோலாக மாறும் மொபைல் வடிவமைப்பு!

ஐடெல் சர்க்கிள் 1 மொபைல் வடிவமைப்பில் புதுமை அறிமுகம் செய்துள்ளது. இதை நீங்கள் கீசெயின் போல உங்கள் சாவிகளுடன் வைத்துக்கொள்ளலாம் அல்லது கழுத்தில் டாலர் செயின் போல் அணிந்து எங்கும் எடுத்துச் செல்லலாம். இதைச் செய்ய, மொபைலின் கீழ்ப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள வசதியான கொக்கி உதவியாக உள்ளது.

கவரும் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் வரும் இந்த மினி மொபைல், அதன் விலை மற்றும் தனித்துவமான வடிவமைப்பால் மொத்த சந்தையை திருப்புகிறது. குறைந்த விலை, மினிமல் டிசைன் மற்றும் பல திறமைகளுடன், இது மொபைல் சந்தையில் ஒரு முக்கிய மாற்றமாகும்!

Previous articleசுதந்திர போராட்ட வீர்களின் பயோபிக்கிற்கு உயிர் கொடுத்த திரை நட்சத்திரங்கள்!!
Next article“முன்பே கணித்தாரா தனுஷ்”! .. “நயன்தாராவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய கேரள நீதிமன்றம்”..!