சேலத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழா!! காவல்துறை பங்கு பெறாததால் சர்ச்சை!!

0
82
Book festival started in Salem!! Controversy because the police did not participate!!
Book festival started in Salem!! Controversy because the police did not participate!!

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவானது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடங்கப்பட்ட நடப்பது வழக்கமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் காவல் துறையினர் கலந்து கொள்ளாதது குறித்த பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த புத்தகத் திருவிழாவானது பலருக்கு பயனுள்ளதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சேலத்தில் புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.

ஆனால், காவல்துறை தரப்பில் மாநகர அதிகாரிகள் (ஆணையர் மற்றும் துணை ஆணையர்) மற்றும் மாவட்ட காவல்துறை (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்) அளவிலான அதிகாரிகள் யாரும் இதில் பங்கு பெறவில்லை என்பதே தற்பொழுது பேச்சு பொருளாகியுள்ளது.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் சிலர் கூறிய தகவல்கள் :-

இதுவரை நடைபெற்ற அனைத்து புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளிலும் காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு நிச்சயமாக பங்கு பெறுவார்கள். ஆனால், இந்த தடவை முறையான அழைப்பு யாருக்கும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறை மேலதிகாரிகள் மட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மேலும், இது குறித்து அரசியல்வாதிகளின் வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்கள் :-

சேலத்துக்கு என்று தனி அமைச்சர் இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரிகிறதா என்று தெரியவில்லை. சமீபத்தில் மாநகராட்சி எல்லையில் அமைச்சர் ஆய்வு செய்ய சென்றபோது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் வரவில்லை. இந்த விஷயம் அப்போதே பெருமளவு பேசுபொருளானது. அதனைத் தொடர்ந்து இன்று புதிதாக அமைச்சராகி, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செயல்படக்கூடிய திட்டத்தில் பங்கு பெறக்கூடிய அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா , அமைச்சர் ப்ரோட்டோ காலில் இது இல்லையா?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து கலெக்டர் பிருந்தா தேவி அவர்கள் கூறியது :-

புத்தகத் திருவிழா தொடர்பாக நடந்த மீட்டிங்கிலேயே காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், மாநகர காவல் ஆணையர் உமா அவர்களோ, ஆய்வு விஷயமாக வந்து விட்டேன். எனக்கு அழைப்பிதழ் வந்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக இது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதமை தொடர்பு கொண்ட பொழுது அவர் அழைப்பை எடுக்கவில்லை என்றும், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்திலை தொடர்பு கொண்டு பேசினோம். “புத்தக விழாவிற்கு அழைப்பிதழ் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous articleGoogle மேப்பின் புதிய அப்டேட்!! தரவுகளை பாதுகாக்க செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!!
Next articleடி எம் சௌந்தரராஜன் எம்ஜிஆர்க்காக பாடிய முதல் பாடலில் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்!!