ஐயப்பன் கோவில் 18 படிகள் உணர்த்தும் கருத்துகள்!!

0
163
18 Steps to Ayyappan Temple Meaningful Comments!!
18 Steps to Ayyappan Temple Meaningful Comments!!
  • முதல் திருப்படி காமம்: பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.
  • இரண்டாம் திருப்படி குரோதம்: கோபமே குடி கெடுக்கும். கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்துவிடும். பிறகு அதற்கு இடம் கொடுப்பதால் என்ன பயன்?
  • மூன்றாம் திருப்படி லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். பேராசை பெரு நஷ்டம் ஆண்டவனை அடையவே முடியாது.
  • நான்காம் திருப்படி மோகம்: மதியீனம் ஆண்டவனை அடைய தடையாக நிற்கும் மதில் சுவர். அதை தகர்த்தெறிய வேண்டாமா?
  • ஐந்தாம் திருப்படி மதம்: மதம் கொண்ட யானையின் கதைதான். வெறி பிடித்தவன் கடவுளால் வெறுக்கப்படுவான்.
  • ஆறாம் திருப்படி மாத்ஸரியம்: பொறாமை கொண்டவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
  • ஏழாம் திருப்படி டம்பம்: தற்புகழ்ச்சி கூடாது. அது அசுர குணம் அல்லவா? அது நமக்கு ஏன்?
  • எட்டாம் திருப்படி அகங்காரம்: அகந்தை கூடாது. பிறப்புக்கே அதுதான் வித்து. பிறந்து பிறந்து இறந்து கொண்டிருக்க வேண்டியதன் முடிவில்லாத சோகச்சுமை.
  • ஒன்பதாம் திருப்படி சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கருமம் செய்தல் வேண்டும். சாத்வீக ஞானம் படைத்தவனுக்கு ஆண்டவன் அருள் எப்பொழுதும் கிட்டும்.
  • பத்தாம் திருப்படி இராஜஸம்: பயனில் இச்சை கொண்டு அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
  • பதினோராம் திருப்படி தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
  • பன்னிரண்டாம் திருப்படி ஞானம்: எல்லாம் ஆண்டவனின் செயல் என்று அறியும் பேரறிவு.
  • பதிமூன்றாம் திருப்படி அஞ்ஞானம்: உண்மை பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
  • பதினான்காம் திருப்படி கண்: ஆண்டவனைக் கண்ணார காணவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
  • பதினைந்தாம் திருப்படி காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு களிப்பெனும் கடலிலே மூழ்க வேண்டும்.
  • பதினாறாம் திருப்படி மூக்குஆண்டவன் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர்ந்து புளகாங்கிதம் அடைய வேண்டும்.
  • பதினேழாம் திருப்படி நாக்கு: கடுஞ்சொற்களை உதிர்த்தல் கூடாது. ஆண்டவன் பெருமையையே பேச வேண்டும்.
  • பதினெட்டாம் திருப்படி மெய்: கரங்களால் ஆண்டவனை கூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் முழுவதும் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனே நமஸ்கரிக்க வேண்டும்.
Previous articleஇளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு தரும் ரூ15 லட்சம் மானியக் கடன்!!
Next articleவங்காள தேசத்தில் வெடித்தது மத கலவரம்!! சிறுபான்மையினர் பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம்!!