ராஜ்நாத் சிங் மற்றும் அமரன் படக்குழுவினர் திடீர் சந்திப்பு!!

0
109
Rajnath Singh and Amaran film team meet suddenly!!
Rajnath Singh and Amaran film team meet suddenly!!

சென்னை: சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன்.

இந்த படத்தில் மேஜர் முகுந்தனாக சிவகர்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முகுந்தன் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம், அமரன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் கேரியரில், ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த முதல் படமாக அமரன் மாறியுள்ளது.

இந்நிலையில், அமரன் படக்குழுவினர் தலைநகர் டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்த்துள்ளனர். மேலும் ஓடிடி ரிலீஸ் தேதி: படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் படத்தினை வாங்கிய ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், படத்தினை ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் இருந்து சற்று தாமதமாக ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டது.

இதனால் அமரன் படம் திரையரங்குகளில் மாபெரும் வசூலைக் குவிக்க உதவியது. இப்படியான நிலையில், படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமத்திய அரசு அறிவித பான் 2.0 திட்டம்!! ஜி மெயில் இருந்த போதும் பான்கார்டு புதுபிக்கலாம்!!
Next articleஇவர் மனுசனே இல்ல அசுர பேட்டிங்!!  இஷான் கிஷான் செய்த  உலக சாதனை சம்பவம்!!