வாட்ச் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி, தன் 50-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறது கேசியோ நிறுவனம். கையில் கட்டி பார்த்து பழகிய வாட்ச் மாடல்களின் காலம் முடிவடைந்தது போலவே, இப்போது கேசியோ எலக்ட்ரானிக் டெக்னாலஜியில் புதிய உச்சத்தை தொடும் விரலில் அணியும் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆபரணம் போலவே, விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் இந்த வாட்ச், எல்.சி.டி ஸ்கிரீனுடன் மணிக்கணக்குகளை மின்னலென காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணியும், நிமிடமும், வினாடிகளும் துல்லியமாகக் காட்டுவதுடன், தேதியுடன் இணைந்த முழுமையான தகவல்களை வழங்குகிறது.
உயர் தர மெட்டல் உடன் கண்ணாடி கிளாஸ் – சிறப்பம்சங்கள்
இந்த வாட்ச் 19mm மற்றும் 16mm அளவுகளில் கிடைக்கும்.
பேட்டரி மாற்றுவது மிகவும் எளிதாகவும், பாதுகாப்பான வடிவமைப்பாகவும் உள்ளது.
மேற்புறம் கண்ணாடி கிளாஸ் அமைக்கப்பட்டதால் இது ஒரு கண்ணாடி மோதிரத்தை போன்ற வடிவமைப்பை கொடுக்கும்.
ஆறு டிஜிட் டிஸ்ப்ளே கொண்டது, நேரத்தை மிகத் தெளிவாக பார்க்கும் வசதி.
இந்த வாட்ச் டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும், ஆனால் இதற்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. விலை குறித்த அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளிவரும் என்று கேசியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரலில் அணியும் வாட்சின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் புயல் கிளப்பியுள்ளன. பலரும் இந்த வாட்சின் புதிய வடிவமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க, “கை வாட்ச் யுகம் முடிந்துவிட்டது!” என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.
கேசியோவின் புதிய வாட்ச் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால், கையில் வாட்ச் கட்டும் பழக்கத்தை முற்றிலுமாக மாறக்கூடிய பரிதாபத்துக்கான வாய்ப்பு உள்ளது. விரலில் அணியும் இந்த வாட்ச் வெற்றி பெற்றால், உலகம் நேரத்தை பார்க்கும் முறையில் புதிய சிந்தனையை உருவாக்கும்!