“உங்கள் வாழ்வில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் 15 நாள்!” ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு.

0
104
"15 Days to Transform Your Life!" Astrologer Shelvi's Prediction.
"15 Days to Transform Your Life!" Astrologer Shelvi's Prediction.
டிசம்பர் 1 முதல் 15 வரை

மேஷம் (Aries)

நம்பிக்கையை உயர்த்தும் நேரம்! அலுவலகத்தில் உங்கள் திறமையால் கூடுதல் வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்பு காத்திருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் சுபகாரிய வாய்ப்புகளும் வரப்போகின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கலை துறையினருக்கு செழிப்பு உறுதி. ஆனால், தலைவலி மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். துர்கையைத் துதியுங்கள், வாழ்க்கை வளம் பெறும்.

ரிஷபம் (Taurus)

உழைப்புக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.  பணியிட உயர்வு காத்திருக்கிறது. பணியில் நிலைமாற்றத்துக்கு தயாராகவும். குடும்பத்தில் ஒற்றுமையும் பூர்வீக சொத்து சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடித்தால் பொருளாதார நிலை மெருகடையும். தலைவலி மற்றும் பற் சிக்கல்கள் வரும் கவனமுடன் இருங்கள். ஏழுமலையானை வணங்குங்கள், வாழ்க்கை தரம் உயரும்.

மிதுனம் (Gemini)

தற்பெருமை அற்ற நடத்தை வெற்றிக்கு கதவைத் திறக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கிறது. வீட்டில் மகிழ்ச்சியும் வீடு, வாகனம் போன்ற சொத்துச் சேர்க்கைகளும் நிறைவேறும். பயணங்களில் கவனமாகவும், வாகனங்களில்  வேகத்தை தவிர்க்கவும். வயிற்று, முதுகு பிரச்னைகளுக்கு தீர்வு தேடுங்கள். மாருதியை வணங்குங்கள், மகிழ்ச்சி தங்கும்.

கடகம் (Cancer)

சிறந்த யோசனைகளும் உழைப்பும் உச்சத்தை அடையச் செய்யும். மேலதிகாரிகள் ஆதரவு உறுதி. வீட்டில் உறவுகள் மேலும் நெருக்கமாகும். தொழிலில் வளர்ச்சிக்கு நேர்மையான முயற்சிகள் தேவை. அரசியல் துறையில் அமைதியாக செயல்படவும். இரவுப் பயணங்களில் முன்னெச்சரிக்கையாக இருங்கள். இஷ்ட மகானை வணங்குங்கள், இனியவை நிரம்பும்.

சிம்மம் (Leo)

கட்டுப்பாடுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. அலுவலக வேலைகளில் நேரம் தவறாமல் இருங்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சியும் வாரிசுகளால் பெருமையும் ஏற்படும். தொழிலில் சட்டத்திற்கு ஏற்ப செயல்படுங்கள் செய்யுங்கள். கண், காது பிரச்னைகள் வரலாம், கணபதியை வணங்கவும். நினைத்தவை எல்லாம் நிறைவேறும்!

கன்னி (Virgo)

முகத்தில் புன்னகையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நேரம். பணியிடத்தில் அனுகூலமான மாற்றங்கள் நடக்கலாம். குடும்பத்தில் அமைதியும் அன்யோன்யமும் நிலவும். தொழிலில் லாபம் சீராக இருக்கும். இரவுப் பயணங்கள் தவிர்த்து, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நரசிம்மரை வணங்குங்கள், வெற்றிகள் குவியும்.

துலாம் (Libra)

திட்டமிடல் உங்கள் வெற்றியை உறுதிசெய்யும். வீட்டில் மகிழ்ச்சிப் பரவலுடன், புதிய செயல்களில் துவக்கம் காத்திருக்கிறது. தொழிலில் லாபம் உச்சத்தைத் தொடும். அரசியல் மற்றும் கலைத் துறையினருக்கு முன்னேற்றம் உறுதி. ஆரோக்கியத்தில் எலும்பு தேய்மானம், தூக்கமின்மைக்கு கவனம் செலுத்துங்கள். அனுமனை வணங்குங்கள், ஆனந்தம் நிறைந்த நாள்கள் வரும்வேலை.

விருச்சிகம் (Scorpion)

கர்வத்தைத் தவிர்த்து, வெற்றியின் பாதையை நோக்குங்கள். வீட்டில் விசேஷங்கள் நிறைந்த நாள். தொழிலில் லாபம் தாராளம். கலைஞர்களுக்கு புதுவாய்ப்புகள் காத்திருக்கும். சின்னசின்ன உடல் உபாதைகள் வரலாம். குலதெய்வத்தை வணங்குங்கள், வாழ்க்கை இனிமையாக்கும்.

தனுசு (Sagittarius)

பொறுமையும் புத்திசாலித்தனமும் வெற்றியை உறுதிசெய்யும். அலுவலகத்தில் சிக்கல்களைத் தவிர்க்க மனநிலை மாறாமல் இருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளர்ந்திடும். தவறுகள் தவிர்க்கத் தேவையான தியானம் அவசியம். பெருமாளை வணங்குங்கள், பெருமை நிரம்பும்.

மகரம் (Capricorn)

நிலையான வாழ்க்கை அமைவதற்கான சிறந்த நேரம். வேலைகளில் பொறுப்புடன் செயல்படுங்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். தொழிலில் செழிப்பு மற்றும் லாபம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் உண்டாகலாம், உடனே கவனியுங்கள். ரங்கநாதரை வணங்குங்கள், வாழ்க்கை நிம்மதியாகும்.

கும்பம் (Aquarius)

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, நம்பிக்கை நிறைந்த வெற்றியை அடையுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், புதிய சொத்துச் சேர்க்கைகளும் ஏற்படும். தொழிலில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனத்தை செலுத்துங்கள்.  இஷ்ட அம்மனை வணங்குங்கள், எண்ணங்கள் நிறைவேறும்.

மீனம் (Pisces)

அவசரமும் அலட்சியமும் தவிர்க்கப்படவேண்டும். பணியில் கவனச் சிதறலைத் தவிர்த்து செயல்படுங்கள். குடும்பத்தில் குழப்பம் மறைந்து அமைதி பெருகும். சுபதடைகள் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். ஜீரண உபாதைகள் வரலாம். ஏழுமலையானை வணங்குங்கள், வாழ்க்கை மேலும் உயர்வடையும்.

Previous articleஆயிரம் ரூபாய் கொடுத்தது வேஸ்ட்!! கோவை  உணவு திருவிழாவில் நடந்த மோசடி!!
Next article“பெரியார் சிலையை உடைப்பேன்” – எச்.ராஜா பதிவு!!  6 மாதம்  சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!