பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அறிவித்த பெல்ஜியம் அரசு!!

Photo of author

By Vinoth

பெல்ஜியம் நாட்டில் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறது அந்த நாட்டு அரசு. இதன் மூலம், பாலியல் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்ற உரிமைகளைப் பெறுவார்கள். இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மூலம் பாலியல் தொழிலும் மற்ற வேலைகளைப் போலவே கருதப்படும். “மற்றவர்களைப் போலவே நாங்களும் மதிக்கப்படுவோம்” என்று புதிய சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 52 மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். பெல்ஜியத்தில், பாலியல் தொழில் 2022 ஆம் ஆண்டு குற்றமற்றது என அங்கீகரிக்கப்பட்டது. மேலும், துருக்கி மற்றும் பெரு போன்ற நாடுகளிலும் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது. இருப்பினும், உலகிலேயே முதன்முறையாக, பாலியல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் ஒப்பந்தங்களை பெல்ஜியம் வழங்கியுள்ளது. மேலும் இந்த தொழில் செய்பவர்கள் கடத்தல், சுரண்டல்  மற்றும் சீண்டல் போன்றவை இந்த சட்டத்தில் தடுக்க இயலாது. இந்த சட்டம் ஆபத்தானது, மற்றும் வன்முறையாக ஒரு தொழில் இயல்பாக்குகிறது.

புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்துபவர்கள் அல்லது முதலாளிகள் சட்டப்பூர்வமாக செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் கண்டிப்பாக விதிகளைப் பின்பற்ற வேண்டும். கடுமையான கிரிமினல் தண்டனை பெற்ற எவரும் பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாலியல் தொழிலை உண்மையிலேயே பாதுகாப்பானதாக மாற்ற எந்த வழியும் இல்லை என ஜூலியா க்றுமியர் கூறினார். மேலும் இந்த பாலியல் தொழில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதன் மூலம் பெண்கள் உதவ முடியும் என்கின்றனர். “பெல்ஜியம் இதுவரை முன்னேறியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்கு இப்போது பாதுகாப்பான எதிர்காலம் உள்ளது.” என்று கூறுகின்றனர்.