நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும்!! ‘குவீன் ஆஃப் தி சவுத்’ !!

0
107
Actress Silk will bring Smitha's captivating story to life!! 'Queen of the South' !!
Actress Silk will bring Smitha's captivating story to life!! 'Queen of the South' !!

பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.  இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது.

அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி – சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த ஏக்தா கபூர் இப்படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 இரண்டாம் பாகத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக  திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்க் ஸ்மிதா இதுவரை 500 படங்களில் 20 ஆண்டுகளுக்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Previous articleகால்பந்து மைதானத்தில் 100 பேர் பலி!! நடுவரின் தீர்ப்பால்  ரசிகர்கள் கொடூர தாக்குதல்!!
Next articleவிவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் மானியம் கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!