மகிழ்ச்சியாக உடலுறவை அனுபவிக்க.. ஒவ்வொரு ஆணும் பருக வேண்டிய ரசம் இது!!

0
60
do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease
do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

ஆண்களே உங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக நேரம் உடலுறவு செய்ய ஓரிதழ் தாமரையை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.

 

தேவையான பொருட்கள்:

 

1)ஓரிதழ் தாமரை இதழ்கள் (அல்லது) பொடி

 

2)தக்காளி பழம்

 

3)பூண்டு பற்கள்

 

4)கருப்பு மிளகு

 

5)சீரகம்

 

6)கடுகு

 

7)உளுந்து பருப்பு

 

8)நெய்

 

9)உப்பு

 

10)பருப்பு தண்ணீர்

 

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு துவரம் பருப்பை குக்கரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பருப்பை நன்கு மசித்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஓரமாக வைத்துவிடவும்.

 

அடுத்து மூன்று பல் வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போடவும்.இதனுடன் அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.

 

அடுத்து ஓரிதழ் தாமரை இதழ்கள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.ஓரிதழ் தாமரை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை பொடி வாங்கி பயன்படுத்தலாம்.

 

இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் சேர்த்து சூடுபடுத்தவும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி வெள்ளை உளுந்து பருப்பு மற்றும் அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரியவிடவும்.

 

அடுத்து ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவையை போட்டு வதக்கி எடுக்கவும்.

 

அடுத்து ஓரிதழ் தாமரை இதழ்கள் அல்லது பொடியை சேர்க்கவும்.பின்னர் பருப்பு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

 

இந்த ஓரிதழ் தாமரை ரசத்தை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஆண்மை அதிகரித்து நீண்ட நேரம் மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ள இந்த ரசம் உதவும்.

Previous articleமாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!
Next articleநோயின்றி 100 வயது ஹெல்தியா வாழ.. TURMERIC COFFEE தினம் ஒரு கப் பருகுங்கள்!!