இந்திய அணியின் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்த நிலையில் டிசம்பர் 6 அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் கம்பீர் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது போட்டிக்கு தயாராகி வருகிறது.
முதல் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை,சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் தற்போது ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதே நேரம் கில் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மேலும் அடுத்து நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதனால் தொடர்ந்து விளையாடுவாரா? எந்த வரிசையில் களமிறங்குவார்? ஒரு வேலை ரோஹித் சர்மா நாடு வரிசையில் களமிறங்குவாரா? என குழப்பம் நீடித்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.