அரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!

0
77

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒருங்கிணைத்த இரண்டாம் ஆண்டு மார்வெலஸ் மார்கழி திருவிழாவில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா, அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியசீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை சுகாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கினார். டாக்டர். பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று, பாரம்பரிய நடனத்தை நிகழ்த்தினர்.

 

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரசன்னா மற்றும் நடிகை சினேகா அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

 

திரையுலகினரின் வாழ்க்கையில் ஏற்படும் விவாகரத்து குறித்த அறிவுரையை யாராலும் வழங்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இது குறித்து தேவையற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

 

மேலும் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். கண்டிப்பாக நல்லது செய்வார் என நம்புகிறார்கள், நாங்களும் நம்புகிறோம்” என்று தெரிவித்திருப்பது வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில், பாடகர்கள் சந்தீப் நாராயண், மகதி, சூர்யா கெய்த்ரி, அருணா சாய்ராம், ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன், ஹரி பிரியா, ஷண்முகா பிரியா, சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் சினேகாவின் சினேகாலயா சில்க்ஸ் நிறுவனம் வடிவமைத்த உடையலங்காரத்தில் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட பூகம்பம்..இரண்டாக பிளந்த அணி!! ஹேசில்வுட் கிளப்பிய புதிய சர்ச்சை!!
Next articleஐயப்பன் கோவிலுக்கு வர கடும் கட்டுபாடுகள் விதித்த இடுக்கி மாவட்ட கலெக்டர்!!