இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி வீரர்கள் இரண்டாவது போட்டிக்கு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் இதுவரை பார்டர் கவாஸ்கர் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடிக்கப்பட்ட வீரர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 65 இன்னிங்ஸில் விளையாடி 9 சதம் அடித்துள்ளார். விராட் கோலி 44 இன்னிங்ஸில் விளையாடி 9 சத்தங்கள் அடித்து அவருடன் முதல் இடத்தை சமன் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் முதல் போட்டியில் விளையாடி முடித்த னியாளியில் இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில் சதம் அடிப்பதன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்து கோலி முதலிடம் பிடிப்பார். அடிலெய்டு மைதானத்தில் நல்ல சராசரி வைத்துள்ளார் விராட் கோலி. எனவே இரண்டாவது போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.