புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

0
116

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன் கிடைக்காது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் புதிய நிபந்தனைகள் :-

 

✓ செங்கல் சுவர்கள், கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.

 

✓ பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வதி இல்லாத 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.

 

✓ வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.

 

✓ வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் திட்டத்தில் பயன்பெற இயலாது.

 

✓ 3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள்.

 

✓ ரூ.50,000-க்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் திட்டத்தில் பயன்பெற முடியாது என்பதாகும்.

Previous articleதனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!
Next articleஅந்த பையனுக்கு பயம் இல்ல..ஜெய்ஸ்வால் செய்த காரியம்!! நான் பண்ண மாட்டேன் இங்கிலாந்து கேப்டன்!!