ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. யார் தொடக்க வீரர் என்ற குழப்பம் தான் அது ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா திரும்பி பயிற்சியில் ஈடுபட்டார் மேலும் கில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கே எல் ராகுல் முதல் ஆட்டம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ச்ரேகர் கூறியதாவது ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க மாட்டார். கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சிறப்பாக விளையாடி தொடக்கத்தில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்து சாதனை செய்தது. இந்த இனையை ரோஹித் சர்மா மாற்ற மாட்டார்.
ரோஹித் சர்மா சமீப காலமாக டெஸ்ட் போட்டியில் அவ்வளவாக பார்மில் இல்லை. மேலும் அவர் மூன்றவதாக இறங்கி ஆடலாம், சுப்மன் கில் 5 வதாக களமிறங்கி விளையாடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.