cricket: இந்திய அணியில் முக்கிய வீரரான அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து வாசிங்க்டன்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. முதல் போட்டி முடிந்த நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்திய அணி நியூசிலாந்து உடனான படு தோல்வி காரணமாக உலக டெஸ்ட் ஷாம்பியன்ஷிப்க்கு ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து தொடரில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆனால் இந்திய அணியின் ஸ்பின்னர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஷ்வின் போன்ற முக்கிய அனுபவம் மிக்க வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா உடனான முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் உடன் இந்திய அணி களமிறங்கியது.
இதனை தொடர்ந்து தற்போது பயிற்சி ஆட்டத்தில் கூட அஸ்வின் விளையாட வில்லை. வாஷிங்டன் சுந்தர் தான் ப்ளேயிங் லெவனில் இருப்பார் என கூறப்பட்டு வருகிறது. மேலும் மாற்று வீரராக ஜடேஜா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறார். ஒருவேளை இரண்டு ஸ்பின்னருடன் களமிறங்க முடிவு செய்தால் ஜடேஜாவுடன் இந்திய அணி களமிறங்கும் என தகவல் வெளியாகி வருகிறது.