என்னதான் நடக்குது இந்த பகலிரவு போட்டில?? இந்தியா vs ஆஸ்திரேலியா..பிங்க் பால் டெஸ்ட் யாருக்கு வெற்றி??

0
130
Who won the pink ball test
Who won the pink ball test

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இரண்டாவது போட்டி பிங் பால் எனப்படும் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது அதன் விவரம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

இந்த பகலிரவு போட்டியானது பகல் இரவிலும் நடைபெறுவதால் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சோதனை பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு தெளிவாக புலப்படுவதில்லை என பல சோதனைகளுக்கு பின் பிங்க் நிறத்தில் அறிமுக படுத்தப்பட்டது. மேலும் இந்த முறை பகலிரவு போட்டியானது 2015 ல் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை இந்த அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற 22 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகள் வென்றுள்ளது. ஒரு போட்டியில் கடைசியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் அதிக முறை ஹோம் டீம் தான் வென்றுள்ளது. இந்த பகலிரவு போட்டியில் அதிகபட்சமாக வார்னர் 647 ரன்கள் சேர்த்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மார்னஸ் லபுசானே 4 சதங்கள் அடித்துள்ளார். மொத்தமாக 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது.

Previous articleபுதிய சாதனை படைத்த புஷ்பா-2 மூவி!! டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி தெரியுமா?
Next articleதமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதுமானது அல்ல!! ராமதாஸ் வலியுறுத்தல்!!