தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி.- சி59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு!!

0
101
PSLV- C59 rocket launch postponed tomorrow due to technical glitch!!
PSLV- C59 rocket launch postponed tomorrow due to technical glitch!!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது.

இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வுசெய்ய உள்ளன.மொத்தம், 550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி,  இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.

இதற்கான, 25 மணி நேர, ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல், 3:08 மணிக்கு துவங்கியது. ராக்கெட்டின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அதில், செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி.,-சி 59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

Previous articleஜெயஷ்வாலிடன் என்னையே நான் பார்த்தேன்..கே எல் ராகுல் உருக்கம்!! பிங்க் பால் குறித்து உண்மையை உடைத்த கே எல்!!
Next article5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்!! பெண்களின் வாழ்க்கையை மாற்றும் அரசின் மாபெரும் திட்டம்!!