புஷ்பா 2 படத்தை காணவந்த பெண் பலி!! குழந்தை ICU-வில் அனுமதி!!

0
86
The woman who was watching the movie Pushpa 2 died!! Baby admitted to ICU!!
The woman who was watching the movie Pushpa 2 died!! Baby admitted to ICU!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுனையும் புஷ்பா 2வையும் ஆசையுடன் பார்க்க தில்சுக் நகரில் இருந்து வந்த ரேவதி எனும் பெண் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரேவதியை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிபிஆர் எல்லாம் செய்து பார்த்தும் அவர் பிழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில், சீரியஸான நிலையில், மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரவு நேரத்தில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதும், ரசிகர்களுடன் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜுன் படம் பார்த்தது எல்லாம் ரொம்பவே தவறான விஷயம் என சமூக ஆர்வலர்கள் அல்லு அர்ஜுனை கண்டித்து வருகின்றனர்.

Previous articleபி.எஃப் பணம் வாங்குபவரா நீங்கள்!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!
Next articleஎனக்கா எண்டு கார்டு போடுறாங்க..ஜடேஜா தான் நம்பர் ஒன்!!வெளியான புள்ளி பட்டியல்!!