புதுவை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி முதல் கனமழை பொழிந்து வருகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் புதுவையில் 48. 4 சென்டிமீட்டர் மலையும் காரைக்காலில் 16. 9 சென்டிமீட்டர் மலையும் கொட்டி தீர்த்தது. அதனைத் தொடர்ந்து சாத்தனூர் மற்றும் வீடூர் ஆணையிலிருந்து திறக்கப்பட்ட இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீரால் தென்பெண்ணை ஆறு மற்றும் அதன் கிளை ஆறு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ள பெருக்கால் டி.என் பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. இதனால் ஆற்றோரும் வசித்து பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நவம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புயல் வெள்ள பாதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் இந்த மாதத்தில் முதல் மூன்று சனிக்கிழமைகளுக்கு பள்ளிகள் இயங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இந்த மாதம் டிசம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.