குணப்படுத்த முடியாத நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோயை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பானங்கள்:
தேவையான பொருட்கள்:
1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
*ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுக்கவும்.
*பிறகு இதை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.
*அதன் பிறகு அரைத்த பெரிய நெல்லிக்காய் சாறு சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் கால் தேக்கரண்டிக்கும் குறைவாக மஞ்சள் தூள் எடுத்து கொதிக்கும் நெல்லிக்காய் சாறில் சேர்க்கவும்.
*பிறகு இதை வடிகட்டி இளஞ்சூட்டில் பருகினால் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும்.இந்த பானத்தை காலை,மதியம்,இரவு என மூன்றுவேளை செய்து பருகி வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் கருஞ்சீரகப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெந்தயத்தை பொடி செய்து இதுபோன்று பானம் செய்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.நாவல் கொட்டையை பொடியாக்கி தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு உயராமல் இருக்கும்.
முருங்கை இலையை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து பருகுவதன் மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க முடியும்.