ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.அதிக கரம் நிறைந்த மற்றம் மசாலா நிறைந்த உணவுகளால் உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் உண்டாகிறது.இதை தான் நெஞ்செரிச்சல் என்கிறோம்.
உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி ஏற்படுகிறது என்றால் நீங்கள் இந்த கை வைத்தியத்தை செய்து நிவாரணம் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)அதிமதுரம்
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதிமதுரத்தை பொடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.இல்லையென்றால் அதிமதுரத்தை வாங்கி லேசாக சூடுபடுத்தி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிளாஸ் சுத்தமான நீரில் அரைத்த அதிமதுரப் பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து பருகினால் நெஞ்செரிச்சல் அடங்கும்.அதிமதுரத்தை வெறும் வாயில் போட்டு சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.
Tips 01
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி
2)தேன்
செய்முறை விளக்கம்:
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் அடங்கும்.
Tips 02
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் நீர்
செய்முறை விளக்கம்:
இந்த ஒரு கிளாஸ் தேங்காய் நீர் பருகி வந்தால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல்,அஜீரணக் கோளாறு போன்றவை சரியாகும்.அதேபோல் தினமும் இளநீர் பருகி வந்தாலும் நெஞ்செரிச்சல் பாதிப்பு குணமாகும்.
Tips 03
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை ஜெல்
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:
கற்றாழை செடியில் இருந்து ஒரு மடலை மட்டும் கேட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து ஒரு மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் நெஞ்செரிச்சல் பாதிப்பு குணமாகும்.